பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
நாடோடி சமூகத்தினரின் வன உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 12:27PM by PIB Chennai
உத்தராகண்ட் அரசுக்கும் டேராடூன், உத்தர்காசி, ருத்ரபிரயாக், சமோலி, உதம்சிங் நகர், ஹரித்வார், பௌரி கர்வால், நைனிடால், டெரி கர்வால் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கும் மத்தியப் பழங்குடியின நல அமைச்சகம் 2025 ஜீன் 5 அன்று கடிதம் அனுப்பியதாகப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே மக்களவையில் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாகக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் உத்தராகண்ட் பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது.
வன உரிமைச் சட்டம் பிரிவு 3(1)(டி)-ன் கீழ் நாடோடி சமூகங்களின் பாரம்பரிய பருவகால வள அணுகல்மிக்க சமூக உரிமைகள் உட்பட எந்தவொரு தகுதியுடையப் பயனாளியும் தங்களுடைய வன உரிமைகளை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் அமைச்சகம் வலியுறுத்துகிறது.
***
(Release ID: 2295347)
VJ/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295375)
வருகையாளர் எண்ணிக்கை : 41