திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:15PM by PIB Chennai

நாடு முழுவதும் தொழிற்பயிற்சியை ஊக்குவிக்கவும், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசு ஆகஸ்ட் 2016-ல், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. 2022-23-ம் ஆண்டு முதல், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் எனத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தப் பயிற்சியில் பங்கேற்கும்  நிறுவனங்களின் வசதிகளைப் பயன்படுத்தி, நேரடிப் பணிச் சூழலில் தொழிற்பயிற்சி நடத்தப்படுகிறது. இது செய்முறை வழிக் கற்றலுக்கும், தொழில்துறை சார்ந்த அனுபவத்தைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது.

தொழில்துறைகள், தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 1961-ம் ஆண்டின் தொழிற்பயிற்சிச் சட்ட  விதிகளின் கீழ், பங்கேற்கும் நிறுவனங்கள் மூலம் இத்தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. தேசிய தொழிற்பயிற்சி இணையதளம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மண்டல இயக்குநரகங்கள், மாநில தொழிற்பயிற்சி ஆலோசகர்கள், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், தொழில்துறை சார்ந்த நேரடிப் பணிப் பயிற்சியை இத்திட்டம் எளிதாக்குகிறது.

தொழிற்பயிற்சியில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இத்திட்டம் உத்வேகம் அளிக்கிறது. உற்பத்தி, பொறியியல், தளவாடங்கள், விவசாயம்,  அது சார்ந்த செயல்பாடுகள், உணவு பதப்படுத்துதல், சில்லறை வர்த்தகம், சுகாதாரம், சுற்றுலா, விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், பிற சேவைத் துறைகள் எனப் பல்வேறு துறைகளில் பெண்களையும் உள்ளடக்கிய வகையில் தொழிற்பயிற்சியாளர்களின் ஈடுபாட்டை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

நாடு முழுவதும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்-2-ன் கீழ், நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ 181.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294856&reg=3&lang=1

(Release ID: 2294856)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2295269) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी