சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாரணாசியின் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் புதிய உயர்மட்ட சாலை: ரூ.14,447 கோடி மதிப்பீட்டில் திட்டம்!

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:09PM by PIB Chennai

இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசிக்கு ஆண்டிற்கு 15 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். இதனால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மத்திய அரசு ரூ.14,447.64 கோடி செலவில் 46.039 கி.மீ நீளத்திற்கு 6 வழிப் பாதையைக் கொண்ட 'கங்கா உயர்மட்டச் சாலை' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

மணிநேரத்திற்கு 80-100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் இச்சாலையால், பயண நேரம் 60 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாக (67சதவீதம் வரை) குறையும்.

 

 காசி விஸ்வநாதர் கோவில், கங்கை படித்துறைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ராம்நகர் கோட்டை மற்றும் காசி ரயில் நிலையம் ஆகியவை எளிதில் இணைக்கப்படும்.

 

கங்கை நதியின் குறுக்கே 910 மீட்டர் கேபிள் பாலம், பாதசாரிகளுக்கான தானியங்கி நடைபாதை  வசதியுடன் கூடிய நடைபாலம், ஒலித் தடுப்பான்கள் மற்றும் கலாச்சாரக் கலைநயத்துடன் கூடிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

 

இத்திட்டம் சுற்றுலா, ஹோட்டல் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294847&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2294847

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2295261) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी