திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகள்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:13PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நாடு முழுவதும் (ஆந்திரப் பிரதேசம் உட்பட) உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும், பெண்கள் உட்பட திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்  வடிவமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உட்பட, தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெற்று, எதிர்காலத்திற்குத் தயாராகும் வகையில் இந்திய இளைஞர்களை (பெண்கள் உட்பட) மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்து, தங்குமிடம்/உணவுக்கான செலவுகளை ஈடுகட்டவும், வேலைவாய்ப்பு பெற்ற பிறகு கூடுதல் உதவிகளை வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாகப் பின்தங்கிய அல்லது பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை முதன்மைப் பயனாளிகளாகக் கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிறப்பு கவனம் செலுத்துகிறது. மேலும், பெண்களுக்கென பிரத்யேகமாக 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களும், 300-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன.

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின்  முக்கிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்ற பெண் விண்ணப்பதாரர்களின் மாநில வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஜூன் 30-ம் தேதி வரை 5,50,060 பெண்களும், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், 1,42,752 பெண்களும், மக்கள் கல்வி நிறுவனத்தின் வாயிலாக, 93,578 பெண்களும், சிடிஎஸ் / ஐடிஐ திட்டத்தின் கீழ், 38,276 பெண்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று மத்திய திறன் மேம்பாடு,தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294851&reg=3&lang=1

(Release ID: 2294851)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2295239) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी