பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 6:11PM by PIB Chennai

புதுதில்லி ஆப்பிரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தானியங்கி அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தை இன்று (ஆகஸ்ட் 05, 2026) திறந்து வைத்துப் பேசிய அவர், நிலப்பரப்பு குறைவாக உள்ள பெருநகரங்களில் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும் என்றார்.

 

"உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காக நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது" என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.

ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 14 அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில், முழுமையான தானியங்கி ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான நிறுத்தங்களை விட 60 சதவீதத்திற்கும் அதிகமான இடப்பயன்பாட்டுத் திறனைக் கொண்டதுடன், வாகனப் புகையற்ற சூழலையும் உறுதி செய்கிறது.

இத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றிய மத்திய பொதுப்பணித் துறைக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2295236) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी