மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்வியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
05 AUG 2026 5:52PM by PIB Chennai
உயர்கல்வித் துறைக்கான மத்திய அரசின் ஒதுக்கீடு 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 34,006.39 கோடியாக இருந்த நிலையில், 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ. 50,747.66 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 'பிரதமரின் உயர் கல்வித் திட்டம்' (PM-USHA) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-24 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு இத்திட்டத்தின் கீழ் ரூ. 12,926.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விடுதிகள், ஆய்வகங்கள், கணினி மையங்கள், டிஜிட்டல் நூலகங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், இணையவழி கல்வி முறையை ஊக்குவிக்கவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு அளித்து வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிற்கு 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 14.45 கோடியும், 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 43.37 கோடியும், 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ. 5.12 கோடியும், 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ. 33.00 கோடியும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில் வழித்தடங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை அமைக்கவும், மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மகளிர் விடுதி அமைக்கவும் மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295018®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2295224)
आगंतुक पटल : 6