உள்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பின் (CCTNS) செயல்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2026 3:06PM by PIB Chennai
குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு (சிசிடிஎன்எஸ்) குற்றம் மற்றும் குற்றவாளிகள் குறித்தத் தகவல்களை உடனுக்குடன் சேகரித்து, புதுப்பித்து, பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. நாட்டின் காவல் நிலையங்களை சிசிடிஎன்எஸ் மூலம் இணைப்பதன் மூலம் காவல் துறையின் பணிகள் (புகார்கள், முதல் தகவல் அறிக்கைகள், விசாரணை விவரங்கள், குற்றப்பத்திரிகை, நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவை) கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மேலும், காவல் துறை, மத்திய புலனாய்வு முகமைகள், நீதிமன்றங்கள், சிறைகள், தடய அறிவியல் மற்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் இடையே தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இது வழிவகுக்கிறது.
டிஜிட்டல் காவல் இணையதளம் மற்றும் மத்திய குடிமக்கள் சேவை இணையதளம் மூலம் காணாமல் போன நபர்களைத் தேடுதல், வாகனச் சான்றின்மைச் சான்றிதழ் பெறுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், புகார்களைப் பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை நகல்களைப் பெறுதல், கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பல்வேறு சரிபார்ப்புச் கோரிக்கைகள் போன்ற 9 கட்டாய சேவைகளை மாநில காவல் குடிமக்கள் இணையதளங்கள் வழங்கி வருகின்றன.
2026 ஜூன் 01 நிலவரப்படி, நாட்டின் அனைத்து 17,762 காவல் நிலையங்களும் சிசிடிஎன்எஸ் அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர், திரு பண்டி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294792®=3&lang=1
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295188)
வருகையாளர் எண்ணிக்கை : 43