சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:07PM by PIB Chennai

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக, ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

திட்டத்தைச் செயல்படுத்திய 'பிஎன்சி இன்ஃப்ராடெக்' நிறுவனத்தை எதிர்கால ஏலங்களில் பங்கேற்கத் தடை விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ரூ.3 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

திட்ட மேற்பார்வையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 முதன்மைப் பொறியாளர்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய திட்ட இயக்குநர் முன்பணி புரிந்த  துறைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் மற்றும் தற்போதைய திட்ட இயக்குநர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

ஐஐடி கரக்பூர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டி தலைமையிலான குழு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகள் முடியும் வரை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294845&reg=3&lang=1

****

TV\EA\SH

 


(रिलीज़ आईडी: 2295148) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी