விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறைக்கான செயல்திட்ட மூலதன நிதி

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 2:29PM by PIB Chennai

விண்வெளித் துறைக்கான செயல்திட்ட மூலதன நிதி, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி)-ன் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த நிதி 31-10-2025 முதல் திட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. விண்வெளித் துறைக்கான செயல்திட்ட மூலதன நிதிக்கு, பங்களிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்-ஸ்பேஸ் நிறுவனம் வழங்கியுள்ள மொத்த பங்களிப்புத் தொகை, 24-07-2026 நிலவரப்படி ரூ 188.93 கோடியாக உள்ளது (இதில் நடப்பு நிதியாண்டான 2026-27-ல் அளிக்கப்பட்ட ரூ 182.87 கோடியும் அடங்கும்). இந்த நிதியத்தின் முதலீட்டுக் குழு, முதலீடு செய்வதற்காக மூன்று புத்தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தொழில்நுட்ப மேம்பாடு, வணிகமயமாக்கல், செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், வளர்ந்து வரும் விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்குப் பங்கு மூலதன நிதி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, செபி-யில் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகை  மாற்று முதலீட்டு நிதியாக இந்த விண்வெளித் துறைக்கான செயல்திட்ட மூலதன நிதியம் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மூலதன நிதி, தகுதியுள்ள விண்வெளித் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப மேம்பாடு, வணிகமயமாக்கல், செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிற்கான மூலதனத்தை வழங்குவதே இந்த நிதியின் நோக்கமாகும்.

மக்களவையில் இன்று, மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294772&reg=3&lang=1

(Release ID: 2294772)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295144) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी