உள்துறை அமைச்சகம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:09PM by PIB Chennai
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 'அனைத்து அரசு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு' அணுகுமுறையுடன் 2026-2029 காலகட்டத்திற்கான போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொலைநோக்கு ஆவணம் கடந்த ஜூன் 26 அன்று வெளியிடப்பட்டது. மத்திய, மாநில முகமைகளை ஒருங்கிணைக்க 4 அடுக்கு நார்கோ-ஒருங்கிணைப்பு மைய கட்டமைப்பு மற்றும் இணையவழி போர்டல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நார்கோ-பயங்கரவாத வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டுக் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை தேசிய அளவில் 11 கூட்டங்களும் மாநில அளவில் 75 கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், செயற்கை போதைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் கடத்தலைத் தடுக்க ரோந்து காவலர்கள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட சர்வதேச முகமைகளுடன் இணைந்து சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடல்வழி கடத்தலைத் தடுக்கக் கடலோரக் காவல் படை மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294796®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2295134)
आगंतुक पटल : 6