புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோடைக்கால பருவமழைப் பொழிவில் எல் நினோ ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வுத் துறை மதிப்பீடு செய்கிறது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 1:57PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத் துறை இந்தியக் கோடைக்கால பருவமழை மழைப்பொழிவில் எல் நினோ ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மதிப்பீடு செய்கிறது. பொதுவாக, எல் நினோ நிகழ்வின்போது இந்தியக் கோடைக்கால பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும். அத்துடன் எல் நினோவின் தீவிரத்தன்மை பருவமழையின் மீதான தாக்கத்தின் அளவை தீர்மானிக்கிறது.  1950-ம் ஆண்டு முதல் 16 எல் நினோ ஆண்டுகள் பதிவாகியுள்ளன.  இவற்றில், 7 ஆண்டுகளில் இந்தியப் பருவமழை இயல்பைவிட குறைவாக இருந்துள்ளது. எனினும், பருவமழைக்காலத்தின் பிற்பகுதியில் (குறிப்பாக செப்டம்பர் மாத மழைப்பொழிவு) எல் நினோவிற்க்கும் மழைப்பொழிவிற்குமிடையே வலுவான எதிர்மாறான தொடர்பு உள்ளது.

2026-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்குமென்று இந்திய வானியல் ஆய்வுத் துறை கூறியது. 2026 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்ட அதன் முதலாவது நீண்டகால முன்னறிப்பின் படி பருவகால மழைப்பொழிவு நீண்டகால சராசரியில் 92%-ஆக இருக்குமென்றும்  இதில், 5% கூடுதலாகவோ, குறைவாகவோ தவறாக அமைய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294735&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2295111) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu