பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினர், பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைகளை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:56PM by PIB Chennai
ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநில, யூனியன் பிரதேச அரசுகளைச் சார்ந்தது என்று மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு இன்று மாநிலங்களவையில் அவர் அளித்துள்ள பதிலில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் பெறப்படும் மாதாந்திர முன்னேற்றம் குறித்த அறிக்கையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் தொகுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறினார். கடந்த 2023-24 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் (அதாவது 01.04.2023 முதல் 31.03.2026 வரை) மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் அளிக்கப்பட்ட, வளர்ச்சி சார்ந்த தொகுக்கப்பட்ட தகவல்களின்படி, மொத்தம் 8,56,159 கோரிக்கைகள் (8,21,908 தனிநபர், 34,251 சமூகக் கோரிக்கைகள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இவற்றில் மொத்தம் 2,34,352 கோரிக்கைகள் (2,18,899 தனிநபர், 15,453 சமூகக் கோரிக்கைகள்) அங்கீகரிக்கப்பட்டு உரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 14,462 கோரிக்கைகள் (13,756 தனிநபர், 706 சமூகக் கோரிக்கைகள்) நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294713®=3&lang=1
(Release ID: 2294713)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295105)
आगंतुक पटल : 6