ஜவுளித்துறை அமைச்சகம்
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் புதிய நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க 'கிரேட்' திட்டம்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 1:42PM by PIB Chennai
மத்திய ஜவுளித் துறையின் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 'கிரேட்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில் (2026-27) தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.256 கோடியில், புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான நிதியும் உள்ளடங்கும்.
இத்திட்டத்தின் கீழ், உள்ளூர் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கல், மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் 31 புத்தாக்க நிறுவனங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.15.40 கோடி ஆகும். இதில் இந்திய அரசின் மானியப் பங்களிப்பு ரூ.13.65 கோடியாகும்.
மருத்துவம், பாதுகாப்பு, விண்வெளி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஜவுளித் தயாரிப்புகளில் இப்புதிய நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294193®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2294631)
आगंतुक पटल : 8