ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் டெக்ஸ் 2026

இடுகை இடப்பட்ட நாள்: 04 AUG 2026 1:41PM by PIB Chennai

மத்திய ஜவுளித் துறையின் ஆதரவுடன் பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பு (BTTF) சார்பில் புதுடெல்லி பாரத் மண்டபத்தில் 'பாரத் டெக்ஸ் 2026' சர்வதேசக் காட்சி நடைபெற்றது. பிரதமரின் பண்ணையிலிருந்து இழை; இழையிலிருந்து தொழிற்சாலை; தொழிற்சாலையிலிருந்து ஆடை வடிவமைப்பு; ஆடை வடிவமைப்பிலிருந்து வெளிநாடு (Farm to Fibre to Factory to Fashion to Foreign) என்ற '5F' தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்டு இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியில் 138 நாடுகளைச் சேர்ந்த 6,090 சர்வதேசக் கொள்முதல் வல்லுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 1,647 நிறுவனங்கள் இதில் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திய நிலையில், 29,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை கூட்டங்கள் நடைபெற்றன. மேலும் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பாரம்பரிய நெசவாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 'இண்டி ஹாட்' கண்காட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சியை வலியுறுத்தும் 'எக்கோ-ஸ்டிட்ச்' அரங்கு ஆகியவை இதில் முக்கிய இடம்பெற்றன.

இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294192&reg=3&lang=1

****

TV/EA/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2294611) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी