உள்துறை அமைச்சகம்
மத்திய ஆயுதக் காவல் படைகளின் நவீனமயமாக்கல்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:27PM by PIB Chennai
மத்திய ஆயுதக் காவல் படைகளை (CAPF) நவீனமயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில், 'நவீனமயமாக்கல் திட்டம்-IV' என்ற மத்தியத் துறைத் திட்டத்தின் வாயிலாக நவீன ஆயுதங்கள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புமுறைகள், இயக்கத் தளங்கள், படைப் பாதுகாப்பு உபகரணங்கள், செயல்பாட்டு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைச் சேர்ப்பது உள்ளிட்டவை அடங்கும்.
நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் விளைவாக, மத்திய ஆயுதக் காவல் படைகளின் செயல்பாட்டுத் திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் செயல்பாட்டுத் தயார்நிலை, இடப்பெயர்வுத் திறன், சூழல் குறித்த விழிப்புணர்வு, கண்காணிப்பு, படைப் பாதுகாப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் எதிர்வினையாற்றும் திறன் ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளன; இதன் மூலம் எல்லைப் பாதுகாப்பு, கிளர்ச்சி ஒழிப்பு, நக்சல் எதிர்ப்பு மற்றும் பிற உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், புதிதாக எழும் பாதுகாப்புச் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294239®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294590)
आगंतुक पटल : 6