எரிசக்தி அமைச்சகம்
மின்சாரத் துறை நவீனமயமாக்கல் மற்றும் சீரான மின் விநியோகம்: மத்திய அரசு அறிக்கை
प्रविष्टि तिथि:
03 AUG 2026 5:33PM by PIB Chennai
இந்தியாவில் தரமான மற்றும் நம்பகமான மின்சாரத்தை வழங்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2025-26 ஆம் நிதியாண்டில் 9,470 மெகாவாட் அனல் மின் திறனும், 55,225 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் திறனும் புதிதாகக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 12,139 கம்பிவட கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மின்கடத்திப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியைச் சீராகப் பயன்படுத்த, 2031-32-க்குள் 47 கிகாவாட் பேட்டரி சேமிப்பு அமைப்புகளையும் , 2035-க்குள் 100 கிகாவாட் பம்ப் செய்யப்பட்ட நீர்மின் சேமிப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி தயாரிப்பு மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கு மானியங்களும், கட்டண விலக்குகளும் வழங்கப்படுகின்றன.
மின் விநியோகச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 7.24 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாட்டின் மின் விநியோக இழப்பு 21.91 சதவீதத்திலிருந்து 15.04 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், 2003 மின்சாரச் சட்டத்திற்குப் பிறகு முதல்முறையாக 2025-ஆம் நிதியாண்டில் மின் விநியோக நிறுவனங்கள் ரூ.2,701 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன. கிராமப்புறங்களில் மின் விநியோக நேரம் 22.6 மணிநேரமாகவும், நகரங்களில் 23.6 மணிநேரமாகவும் உயர்ந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293896®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2294116)
आगंतुक पटल : 5