சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமைக் கடன் திட்டத்தின் செயல்பாடுகள்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 5:31PM by PIB Chennai

பசுமைக் கடன் திட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு சாதகமான செயல்பாடுகள், மிஷன் லைஃப் எனப்படும் இயற்கைக்கு உகந்த வாழ்வியல் முறை இயக்கத்தின் நோக்கங்களை ஊக்குவிப்பதற்கான புதுமையான வழிமுறையாகும்.

இத்திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள், நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பசுமையான சூழலுக்கு வழி வகுப்பது, கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல், பயன்பாடற்று இருக்கும் நிலங்களை மீட்டெடுப்பது,  கார்பன் தடயத்தைக் குறைப்பது போன்ற அம்சங்களை   நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ், பசுமை சார்ந்த செயல்பாடுகளுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்குவதன் மூலம், தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, நேர்மறையான செயல்களை ஊக்குவிக்கும் வகையில், பசுமைக் கடன் விதிமுறைகளை 2023 அக்டோபர் 12 அன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பசுமைக் கடன் திட்டத்தின் கீழ், மரங்களை வளர்ப்பது,  பயன்பாடற்று இருக்கும் வன நிலங்களை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை 2024 பிப்ரவரி 22 அன்று அறிவிக்கப்பட்டு,2025 ஆகஸ்ட் 29 அன்று திருத்தியமைக்கப்பட்டது. இதற்கென பிரத்யேகமாக பசுமைக் கடன் திட்ட இணையதளம் (https://moefccgcp.in/) உருவாக்கப்பட்டுள்ளது.

டேராடூன் பசுமைக் கடன் திட்டத்தின் கீழ், நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை இந்திய வனவியல் ஆராய்ச்சி, கல்விக் கவுன்சில் மேற்கொள்ளும். மேலாண்மை, செயல்பாடு, பசுமைக் கடன்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டம் சார்ந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவது அதன்  பொறுப்பாகும்.

மக்களவையில் இன்று, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293887&reg=3&lang=1               

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2294105) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी