தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இருவார கால இணையவழி குறுகிய கால அனுபவப் பயிற்சித் திட்டம் துவக்கம்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 5:50PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள இரண்டு வார கால இணையவழி குறுகிய கால அனுபவப் பயிற்சித் திட்டம் (OSTI), புதுதில்லியில் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் இதைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆணைய உறுப்பினர் நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, பொதுச் செயலாளர் திரு பியூஷ் கோயல், இணைச் செயலாளர்கள் திரு சமீர் குமார் மற்றும் திருமதி சைடிங்புயி சக்சுவாக், மற்றும் இயக்குநர் திருமிகு சதோவிஷா சமாஜ்தார் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 2,036 விண்ணப்பதாரர்களிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ராமசுப்பிரமணியன், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மோதல்களிலிருந்து இந்திய இளைஞர்கள்  விலகி வாழ்வதை, அவர்களுக்குக் கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டார். ஆயுத மோதல்கள் மற்றும் இடப்பெயர்வை எதிர்கொள்ளும் பலரைப் போலன்றி, இவர்களுக்கு உணவு, கல்வி மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். 'பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்' வெளியிட்ட 'உலகளாவிய அமைதி குறியீடு 2025'-ஐ மேற்கோள் காட்டிய நீதிபதி, தற்போது உலக நாடுகள் சுமார் 130 ஆயுத மோதல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 98 நாடுகள் வெளி நாடுகளுடன் மோதல்களை எதிர்கொண்டு வருவதுடன், 122 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கட்டாய இடம்பெயர்வுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகளாவிய பொருளாதார இழப்பு கிட்டத்தட்ட 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இவை அனைத்தும், உலகம் முழுவதும் நிலவும் தீவிரமான மனிதாபிமானச் சூழலை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293918&reg=3&lang=1               

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2294090) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी