சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வனப் பாதுகாப்புத் திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 5:28PM by PIB Chennai

காடுகளைச் சார்ந்த சமூகங்கள், வனப் பாதுகாப்பு,  நிலையான வன மேலாண்மை நடவடிக்கைகள், பல்வேறு திட்டங்கள், நிறுவன ரீதியிலான வழிமுறைகள் மூலம், தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மண்டலங்களைச் சுற்றியுள்ள உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைந்த வன மேலாண்மைக் குழுக்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவற்றின் மூலம் வனப்பு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி,வன மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இக்குழுக்கள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டுவதைத் தடுத்தல், காட்டுத்தீ மேலாண்மை, காடு வளர்ப்பு நடவடிக்கைகள், சிதைந்த காடுகளை மீட்டெடுத்தல், வன வளங்களின் நிலையான மேலாண்மை உள்ளிட்ட வனப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கின்றன. பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டத்தின் கீழ், தகுதியுள்ள பழங்குடியின சமூகங்களின் வன உரிமைகளை அங்கீகரித்து, அதற்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது.

நிலையான பயன்பாட்டிற்காக சமூக வன வளங்களைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், பராமரிக்கவும்,  நிர்வகிக்கவும் கிராம சபைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், வனப் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.

மக்களவையில் இன்று, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293885&reg=3&lang=1              

***

TV/SV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294089) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी