திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
प्रविष्टि तिथि:
03 AUG 2026 4:09PM by PIB Chennai
துணை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரத் துறைகள் உட்பட தொழில்துறைக்குத் தேவையான திறன்களை அளித்து நாட்டின் இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையில் திறம் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் அனைத்துச் சமூக மக்களுக்கும் திறன் பயிற்சி, மறு திறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை அளிக்கிறது.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0 வின் கீழ் உள்ள முக்கிய சுகாதார பணிகளுக்கான பிரிவுகளில் அவசர மருத்துவத் தொழில்நுட்ப நிபுணர்-அடிப்படை, பொதுப்பணி உதவியாளர், முதியோர் பராமரிப்பாளர் (நிறுவனம், இல்லம் சார்ந்த பராமரிப்பு), சுகாரதார நலன் மற்றும் பராமரிப்பு உதவியாளர், யோகா உதவி பயிற்சியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பல்திறன் கொண்ட 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கானத் திட்டம் குறித்து 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293795®=3&lang=1
***
TV/IR/SM/SE
(रिलीज़ आईडी: 2294061)
आगंतुक पटल : 9