திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகத்தின் பல்வேறுத் திட்டங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 4:07PM by PIB Chennai

மத்தியப் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் ஆய்வு அளித்த சமீபத்திய தகவலின்படி 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கான நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நிலையாக உள்ளது. இது 2024-ல் 59.6 சதவீதமாக இருந்த நிலையில் சிறிது குறைந்து 2025-ல் 59.3 சதவீதமாக இருந்தது.

மத்திய அரசின் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது. இவை பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனம், தேசியத் தொழில்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழில்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் போன்ற  விரிவானத் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரதமரின் திறன் மேம்பாடுத் திட்டம் மூலம் 2026 ஜூன் மாதம் வரை 16,541,679 பேர் பயிற்சிப் பெற்றுள்ளனர்.

இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293792&reg=3&lang=1           

***

TV/IR/SM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2294059) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी