பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 3:54PM by PIB Chennai
நீடித்த நிறுவன சீர்த்திருத்தங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், தொடர்ச்சியானக் கண்காணிப்பு ஆகியவை நாட்டின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் 4,000-ற்கும் அதிகமான எண்ணிக்கையிலிருந்து சுமார் 700-ஆக குறைந்துள்ளது.
இத்தகவலை மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள திரு பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தப் போதுத் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயல்முறை சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பு நிர்வாகத்தை நவீனமயமாக்க மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள முக்கிய முயற்சிகள் குறித்து அவர் அமைச்சரிடம் விளக்கினார்.
வெளிப்படையான, காலகெடுவுக்கு உட்பட்ட கண்காணிப்பு அமைப்பு முறை சிறந்த நிர்வாகத்திற்கு அவசியமென்றும், அவை நிறுவனங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293785®=3&lang=1
***
TV/IR/SM/SE
(रिलीज़ आईडी: 2294058)
आगंतुक पटल : 5