நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானியத்துடன் கூடிய வேளாண் கடன் அட்டை திட்டம், பயிர் செறிவூட்டல், பல பருவ சாகுபடியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 03 AUG 2026 4:26PM by PIB Chennai

நாட்டில் உள்ள பல்வேறு வேளாண் மண்டலங்களில், திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானியத்துடன் கூடிய வேளாண் கடன் அட்டை திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக, பெங்களூருவில் உள்ள சமூக -  பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் மூலம் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக -  பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்த தகவலைகளை, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும், வேளாண், அது சார்ந்த துறைகளில், நிகர மதிப்பு கூட்டல் தொகையில் ரூ 2.30 பங்களிப்பை வழங்குகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரை ரூ 1.87 லட்சம் கோடி மானியத் தொகைக்கான செலவினத்தின் மூலம், விவசாயிகளின் மீதான வட்டிச் சுமையைக் குறைப்பதில் திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது.

நம்பகமான நீர்ப்பாசனம், சலுகை விலையிலான கடன் வசதிகளின் உதவியுடன், இத்திட்டத்தின் பயனாளிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்தல், அதிக பயிர்ச் செறிவை அடைதல், பருவ காலங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் பயிர்ச் செறிவூட்டல், பல பருவ சாகுபடியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதுமான செயல்பாட்டு மூலதனம் கிடைப்பதன் மூலம் இடுபொருட்களைப் பயன்படுத்துவதில் சரியான நேர மேலாண்மை மேம்பட்டுள்ளது. மேலும், உடனடித் திருப்பிச் செலுத்துதலுக்கான ஊக்கத்தொகை பெறும் பயனாளிகள், நடைமுறைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளது, வங்கிகளுக்கு மேலும் கடனுதவி  வழங்குவதற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2025-26-ம் நிதியாண்டில் செயல்பாட்டிலுள்ள 41,87,135 வேளாண் கடன்  அட்டைகளில் நிலுவைத் தொகையாக ரூ 52,383 கோடி   உள்ளது என்று மாநில வாரியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று,கால்நடை வளர்ப்பிற்காக வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள 8,30,139 வேளாண் கடன் அட்டைகளில், கடந்த நிதியாண்டில், ரூ 8,110 கோடி நிலுவையில் உள்ளது.

மக்களவையில் இன்று, மத்திய நிதித்துறை  இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293813&reg=3&lang=1         

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2294044) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati