திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழில் பயிற்சி நிலையங்களுக்கான பாடத்திட்டம்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 4:11PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ், பயிற்சித் தலைமை இயக்குநரகம், நாடு முழுவதும் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மூலம், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், தேசிய திறன் தகுதி கட்டமைப்பு தரநிலைகளுக்கு ஏற்ப,170 தொழிற்பயிற்சிப் பாடநெறிகளை வழங்குகிறது. தொழில் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்துப் பாடநெறிகளும், தேசிய திறன் தகுதி கட்டமைப்பிற்கு ஏற்பவும், தொழிற்கல்வி,பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறிவரும் பணிசார் தரநிலைகள், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது தொழிற்கல்வி, பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன.
பாடத்திட்டத்தை ஆய்வு செய்து திருத்தி அமைக்கும் செயல்முறை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறிவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் ஒரு தொடர்ச்சியான, தேவை அடிப்படையிலான நடவடிக்கையாகும்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும் பணிசார் தரநிலைகள், தொழில்துறைத் தேவை, வேலைவாய்ப்பு, தொழிற்பழகுநர் பயிற்சிக்கான தேவைகள், பயிற்சி முடிவுகள், அமலாக்கத்தின் போது பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய பாடத்திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
மக்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293796®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2294024)
आगंतुक पटल : 9