கலாசாரத்துறை அமைச்சகம்
ஞான பாரதம் இயக்கம் மற்றும் கையெழுத்துப் பிரதி போன்ற பாரம்பரிய ஆவணங்களை பாதுகாத்தல் குறித்த தகவல்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 4:19PM by PIB Chennai
கடந்த நிதியாண்டிற்கான (2025-26) மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'ஞான பாரதம்' இயக்கம், கையெழுத்துப் பிரதிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவதற்கான மத்திய கலாச்சார அமைச்சகத்தின் முயற்சியாகும்.
மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குதல், ஆவணப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கணிசமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்.
கையெழுத்துப் பிரதிகளைக் கணக்கெடுப்பு செய்து பதிவு செய்தல், இந்தியக் கையெழுத்துப் பிரதிகள் எங்கு இருந்தாலும் அவற்றை ஆவணப்படுத்திப் பட்டியலிடுவதுடன், அவற்றைப் பாதுகாப்பதற்கான சூழல்கள் குறித்த துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பராமரித்தல், கையெழுத்துப் பிரதிகளின் பயன்பாட்டை எளிதாக்குதல், புத்தக வடிவம், கணினியில் வாசிக்கக்கூடிய வடிவம் ஆகிய இரண்டிலும் வெளியீடுகள் மூலம் அவற்றை எளிதாக அணுகுவதை ஊக்குவித்தல், பயிற்சி, விழிப்புணர்வு, நிதி உதவி மூலம் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தல், பராமரித்தல் நடவடிக்கைகளை எளிதாக்குதல்,இந்திய மொழிகள், கையெழுத்துப் பிரதி ஆய்வியல் குறித்த புலமை, ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல், ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய முன்முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், நிலைக்குழு நிதி ஆணையம் 2025-2031 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.491.66 கோடி வழங்க அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கையெழுத்துப் பிரதி சேகரிப்புகள், களஞ்சியங்கள்,அவற்றைப் பாதுகாக்கும் நபர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த, நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் மார்ச் 2026-ல் 'தேசிய கையெழுத்துப் பிரதி கணக்கெடுப்பு' தொடங்கப்பட்டது.
இக்கணக்கெடுப்பின் போது, 1.19 கோடிக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதில் 4.40 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் தற்போது 'ஞான பாரதம்' இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக (மாநில வாரியாக) கிடைக்கின்றன.
மக்களவையில் இன்று, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293807®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2294000)
आगंतुक पटल : 7