தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாடிக்கையாளர்களின் கருத்துகளின் வாயிலாக, குரல்வழி அழைப்பின் தரத்தை மதிப்பிடுவதற்கான மொபைல் செயலியை டிராய்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2026 4:11PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), தொலைத்தொடர்பு சேவைகளை பெறும் வாடிக்கையாளர்கள், குரல்வழி அழைப்பு தொடர்பான தங்களின் அனுபவத்தை நேரடியாக மதிப்பிட்டுப் புகாரளிக்க ஏதுவாக 'டிராய் மை கால்' என்ற மொபைல் செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட செயலி,மக்களை மையமாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் தளமாகும். இது தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் குரல்வழி அழைப்பு அனுபவம் குறித்த நிகழ்நேரக் கருத்துகளையும், அதனுடன் தொடர்புடைய வலைதள அளவுருக்களையும் பகிர்ந்துகொள்வதற்கான அதிகாரத்தை அளிக்கிறது.

வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள், அவர்களது அடையாளம் போன்றவை மறைக்கப்பட்ட வடிவத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும், டிராய் அமைப்பிற்கும் வழங்குகிறது. இந்தக் கருத்துகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, மதிப்புமிக்க நுண்ணறிவுத் தகவல்களை வழங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293797&reg=3&lang=1  

***

 TV/SV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2293986) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी