புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்பாட் (chatbot) மற்றும் பன்மொழி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'e-sigma' தளம் மூலம் தேசிய மாதிரி ஆய்வு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது: மத்திய புள்ளியல் அமைச்சகம்
प्रविष्टि तिथि:
03 AUG 2026 2:51PM by PIB Chennai
தேசிய புள்ளியியல் தரவுகள் சேகரிப்புத் தொடர்பான சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சாட்பாட், பன்மொழிப் பயன்பாட்டிற்கான செயலிகள் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இ-சிக்மா இயங்கு தளத்துடன் ஒருங்கிணைந்த கணினி உதவியுடன் கூடிய தனிநபர் நேர்காணல் போன்ற டிஜிட்டல் நடைமுறைகளை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம், தரவுகளைச் சேகரிப்பதற்கான தேசிய மாதிரி ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில், மத்திய புள்ளியியல் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
அடிக்கடி தேவைப்படும் சமூக-பொருளாதாரக் குறியீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிறைவு செய்யும் வகையில், மத்திய புள்ளியியல் அமைச்சகம் குறுகிய காலக் கணக்கெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
மேலும், சில ஆய்வுகளுக்கான மாதிரி சட்ட விதிகளை வலுப்படுத்த உதவிடும் நிர்வாக ரீதியிலான தரவுத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இது மாதிரி கணக்கெடுப்புப் பணிகளின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளதுடன், அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை சரியான நேரத்தில் தொகுத்து வழங்குவதற்கும் பங்களித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான அடிப்படைத் திருத்தம் உட்பட, பெரும் பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களிலும், குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293737®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2293982)
आगंतुक पटल : 12