கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருங்காட்சியகங்கள், கலாச்சார நிறுவனங்களில் உள்ள ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 03 AUG 2026 4:22PM by PIB Chennai

அருங்காட்சியகத் தொகுப்புகள், ஆவணக் காப்பக வளங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக, புனேவில் உள்ள சி-டாக் அமைப்பால் உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவின் கலாச்சாரச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், இணையதளம் வாயிலாக இணைக்கப்பட்டு ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான 8 அருங்காட்சியகங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இரண்டு தள அருங்காட்சியகங்கள், புனேவில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் ஆகியவற்றின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொகுப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதுவரை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவனத் தொகுப்புக்களை பின்வரும் இணையதள முகவரியில் பார்வையிடலாம்: https://museumsofindia.gov.in/repository

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள ஞான பாரதம் இயக்கம், இந்தியாவின் விரிவான கையெழுத்துப் பிரதிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும், எதிர்கால சந்ததியினருக்காக அதன் நாகரிக அறிவுசார் மரபுகளை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது ஞான பாரதம் இணையதளத்தில், பொதுமக்களின் பார்வைக்காக 3.5 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்வரும் இணையதள முகவரிக்குச் சென்று பார்வையிடலாம்: https://gyanbharatam.com/ 

மக்களவையில் இன்று, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293811&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2293964) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese