நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம்: தமிழகத்தைச் சேர்ந்த 100 கல்வி நிறுவனங்கள் பதிவு
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2026 2:18PM by PIB Chennai
தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, மேம்படுத்தப்பட்ட இணையதளம் 2.0-ஐ, 2024 செப்டம்பர் 11 அன்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் அமைந்திருந்த இந்த இணையத்தளம், நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், குழுக்கள், மக்கள் பங்கேற்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது அறிமுகப்படுத்தப்பட்ட தினத்திலிருந்து, இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் குறித்த விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது:
இதன்படி, தேசிய இளையோர் நாடாளுமன்றத் திட்டத்திற்கான மேம்படுத்தப்பட்ட இணையதளம்-2.0 அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 2026 ஜூலை 21-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து, 100 கல்வி நிறுவனங்களும், 18 குழுக்களும், 1,781 தனி நபர்களும் பதிவு செய்துள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293713®=3&lang=1
***
VJ/PD/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2293951)
வருகையாளர் எண்ணிக்கை : 48