ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி ஊக்குவிப்பு தொடர்பான உச்சி மாநாடு ஆகஸ்ட் 5-ம் தேதி புது தில்லியில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 02 AUG 2026 2:08PM by PIB Chennai

இந்தியாவின் வளமான புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி, கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் அவற்றின் நிலையை வலுப்படுத்தவும், மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, ஜிஐ & பியாண்ட் 2.0  (GI & Beyond 2.0) என்ற தலைப்பிலான உச்சிமாநாட்டை 2026 ஆகஸ்ட் 5 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த உச்சிமாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் ஜவுளித் துறை செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இந்த உச்சிமாநாடானது, இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி, கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பதையும், புவிசார் குறியீட்டுச் சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வாங்குவோர், இந்தியா முழுவதிலுமிருந்து ஏற்றுமதியாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், புவி சார் குறியீடு பெற்ற பொருட்களின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள், மத்திய - மாநில அரசுத் துறைகளின் அதிகாரிகள், முன்னணி ஜவுளி பிராண்டுகள், சில்லறை விற்பனைச் சங்கிலிகள், மின் வணிகத் தளங்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைக்கும்.

இந்த உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சம், நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட புவிசார் குறியீட்டுப் பதிவு பெற்ற கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியாகும். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முக நெசவு மரபுகளை வெளிப்படுத்தும் கருப்பொருள் சார்ந்த கண்காட்சிகளும், கைத்தறி நெசவு, கைவினைப் பொருட்களின் நேரடி செயல்விளக்கங்களும் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293352&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293520) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी