நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 2026-ல் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 7.51% வளர்ச்சி அடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 02 AUG 2026 11:00AM by PIB Chennai

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஜூலை மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.51% வளர்ச்சி கண்டுள்ளது. 2025 ஜூலை மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 64.88 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில், 2026 ஜூலை மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 69.75 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு 73.57 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 86.33 மில்லியன் டன்னாக உயர்ந்து, 17.34% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிலக்கரி உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, நிலக்கரி அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகிறது.

2026-27-ம் நிதியாண்டில், ஜூலை மாதம் வரையிலான ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 302.24 மில்லியன் டன்னாக இருந்தது. அதே சமயம், ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் 354.70 மில்லியன் டன்னாக உயர்ந்து, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5.87% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், நிலக்கரி கிடைப்பதை மேம்படுத்துவதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இந்த நேர்மறையான உத்வேகத்துடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு உந்துசக்தியாக நிலக்கரித் துறை ஒரு முக்கியப் பங்கைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293224&reg=3&lang=1

****

(Release ID: 2293224)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293485) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी