பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபு திருமாறனுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2026 12:49AM by PIB Chennai
2026 கிளாஸ்கோவ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மும்முறை தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபு திருமாறனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பதக்கத்தை வெல்வதற்காக செல்வ பிரபு திருமாறன் சிறப்பாக செயலாற்றியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த மும்முறை தாண்டுதலைப் பதிவு செய்து வெண்கலம் வென்ற செல்வ பிரபு திருமாறனை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகளில் அவர் சிறந்து விளங்கட்டும்.”
***
(Release ID: 2293177)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2293454)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam