சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி-ஜெய்ப்பூர் பிரிவில், ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடியில், தடையற்ற சுங்கக் கட்டண முறை தொடக்கம்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 5:45PM by PIB Chennai

வேகமான, தடையற்ற, இடைநில்லா பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில், ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-48-ல் தில்லி-ஜெய்ப்பூர் பிரிவில் அமைந்துள்ள ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடியில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பலவழித்தடங்கள் கொண்ட தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இதே வழித்தடத்தில் உள்ள தௌலத்புரா, மனோகர்புரா சுங்கச்சாவடிகளில் பலவழித்தட தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 பரபரப்பான தில்லி-ஜெய்ப்பூர் பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடியில் பலவழித்தட தடையற்ற போக்குவரத்து முறை தொடங்கப்பட்டதன் மூலம், மனேசரிலிருந்து ஜெய்ப்பூருக்கான பயணம் முற்றிலும் இடைநில்லா, தடையற்ற பயணமாக மாறியுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.

பலவழித்தடங்கள் கொண்ட தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண கட்டமைப்பானது, குறைந்தபட்ச மனிதத் தலையீட்டுடன் தடையில்லா சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது. இது வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் கடந்து செல்லவும், தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. காத்திருப்பு நேரத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலமும், தடையற்ற வாகன இயக்கத்தை உறுதி செய்வதன் மூலமும், இது பயணிகளுக்கு நேரத்தைச் சேமிக்கவும், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தவும், அத்துடன் சுங்கச்சாவடியில் ஏற்படும் வாகனப் புகை வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த அமைப்பு, தானியங்கி பயனர் கட்டண வசூலை எளிதாக்குவதற்காக, தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார தொழில்நுட்பத்தை, ஃபாஸ்டேக் அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூலுடன் ஒருங்கிணைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293021&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293159) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी