வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், பல்ஸ்வா குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 2:58PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், தில்லி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பழைய கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று (01.08.2026) பல்ஸ்வா குப்பைக் கிடங்கிற்கு வருகை புரிந்தார். சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும், பழைய கழிவுகளை அகற்றும் பணியின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலும் அரசு தொடர்ச்சியான கவனம் செலுத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். தில்லி மாநகராட்சி ஆணையர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கள ஆய்வின்போது, பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் 31 ஜூலை 2026 வரை 99.07 லட்சம் மெட்ரிக் டன் பழைய கழிவுகள் அகற்ப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பழைய கழிவுக் குவியல் 15 அக்டோபர் 2026-க்குள் அகற்றப்படும் எனவும், அதேவேளையில் மார்ச் 2026 வரை குவிந்த கழிவுகளை 31 டிசம்பர் 2026-க்குள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

குப்பைக் கிடங்கிற்கு வரும் புதிய கழிவுகளைப் பதப்படுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு அமைச்சர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292957&reg=48&lang=1  

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293035) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu