ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லூதியானா-ஜக்கால் பயணிகள் ரயிலை ஜிந்த் வரை நீட்டிக்க ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 12:31PM by PIB Chennai

பிராந்திய ரயில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வடக்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 54053/54054 எண் கொண்ட லூதியானா-ஜக்கால் தினசரி பயணிகள் ரயிலை ஜிந்த் வரை நீட்டிக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, லூதியானா - ஜிந்த் இடையே நேரடி ரயில் இணைப்பை வழங்கும். இதன் மூலம் தினசரி பயணிகள், மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வர்த்தகர்கள், பஞ்சாப், ஹரியானா இடையே பயணம் செய்யும் பயணிகள் ஆகியோர் பயனடைவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட இந்த நீட்டிப்பின் மூலம், தொடர்வண்டி எண் 54054 இனி லூதியானாவிலிருந்து ஜிந்திற்கும், தொடர்வண்டி எண் 54053 ஜிந்திலிருந்து லூதியானாவிற்கும் இயக்கப்படும். இது, முன்னதாக லூதியானா-ஜக்கால் வழித்தடத்தில் இயக்கப்பட்ட சேவைக்கு மாற்றாக அமையும்.

ரயிலின் பயணத் தூரம் 128 கிலோ மீட்டரிலிருந்து 200 கிலோ மீட்டராக அதிகரித்து, இரு முக்கிய நகரங்களுக்கு இடையே தடையற்ற பயணிகள் இணைப்பை வழங்கும்.

இந்த ஒப்புதல், பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கி, பிராந்திய ரயில் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான ரயில்வேயின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292892&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2292987) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada