ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கான நிதி

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 5:19PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (கிராமப்புறம்) (விபி-ஜி ராம் ஜி ) சட்டம், 2025 நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 2026  ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் விபி ஜி ராம் ஜி திட்டத்தை அறிவிக்கை செய்து, அதனைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இத்திட்டம் 01.07.2026 அன்று தொடங்கப்பட்டது முதல் செய்யப்பட்ட இடைக்கால ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கப்பட்ட முதன்மை அங்கீகாரங்கள்  பற்றிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வாரியான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி தமிழ்நாட்டுக்கு இடைக்கால ஒதுக்கீடாக 7,585.49 கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதன்மை அங்கீகாரம் முதல் தவணையாக 2,176.84 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தேதியின்படி, இத்திட்டத்தின் கீழ், எந்தவொரு மாநிலத்துக்கும்/யூனியன் பிரதேசத்துக்கும் சேரவேண்டிய தொகை  எதுவும் நிலுவையில் இல்லை.

இத்தகவலை கிராமப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292536reg=3&lang=1       

---

TV/PKV/SE

 

(வெளியீட்டு அடையாள எண்: 2292821) வருகையாளர் எண்ணிக்கை : 76
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी