2025-26 ஆம் ஆண்டிற்கு ஜூன் 2026 வரை பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மொத்தம் 33.54 லட்சம் வீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; மேலும் 35.54 லட்சம் வீடுகள் (முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் உட்பட) கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் அங்கீகரிக்கப்பட்டு, 6,72,338 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இன்று வரை, இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 4.18 கோடி வீடுகள் இலக்காக ஒதுக்கப்பட்டதில் 3.92 கோடி வீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 3.11 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் 1.06 கோடி வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.
மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களே கள அளவில் முதன்மை அமலாக்க அதிகாரிகளாக உள்ளனர். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, வீடுகள் நிறைவடைவதில் ஏற்படும் தாமதத்திற்கான முக்கிய காரணங்களாவன: பயனாளிகளின் விருப்பமின்மை, நிரந்தர இடம்பெயர்வு, காலமான பயனாளிகளின் வாரிசுரிமை தொடர்பான சர்ச்சைகள், நிலமற்ற பயனாளிகளுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நிலம் ஒதுக்குவதில் ஏற்படும் தாமதம், புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் சில நேரங்களில் பொது/சட்டமன்ற/பஞ்சாயத்து தேர்தல்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் கிடைக்காமை ஆகியவை ஆகும்.
இத்தகவலை கிராமப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292531reg=3&lang=1
---
TV/PKV/SE