ஆயுஷ்
யுனானி மருத்துவ முறை மற்றும் கல்வியை ஊக்குவித்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 3:36PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம், அதன் தகவல், கல்வி மற்றும் தொடர்பு திட்டத்தின் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளின் வாயிலாக யுனானி உள்ளிட்ட அனைத்து ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிக்கவும் யுனானி மருத்துவ முறையைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கவும் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் யுனானி தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி மன்றம் நாடு முழுவதும் 21 கிளினிக்கல் நிறுவனங்கள்/அலகுகள்/மையங்களைச் இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது பல்வேறு வெளிப்புற நோயாளிப் பிரிவுகள் மூலம் பரவலான சுகாதாரச் சேவைகளை வழங்குகின்றன. மருத்துவப் பராமரிப்புடன் கூடுதலாக, வாழ்வியல் மற்றும் இதர நோய்களைத் தடுப்பது மற்றும் மேலாண்மை செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிறுவனங்கள் பரந்த அளவிலான பொது சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்கின்றன. பல்வேறு முன்னெடுப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 47 லட்சம் பயன்பெற உதவியுள்ளன. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி விநியோகம் மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் வகையில், இக்கவுன்சில் 3 சர்வதேச மாநாடுகள், 205 பயிற்சித் திட்டங்கள் மற்றும் 322 கருத்தரங்குகள், மாநாடுகள், இணையக் கருத்தரங்குகள் மற்றும் உரை நிகழ்ச்சிகளை அமைத்துள்ளதோடு, 129 ஆரோக்கியா/சுகாதார மேளாக்கள் மற்றும் கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளது.
இத்தகவலை ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292394®=3&lang=1
---
TV/PKV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2292805)
வருகையாளர் எண்ணிக்கை : 34