சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறங்களில் பொது சுகாதார சேவையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:33PM by PIB Chennai

சுகாதாரம் என்பது மாநில விவகாரமாகும். பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான முதன்மை பொறுப்பு அந்தந்த மாநில/யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் திட்ட அமலாக்கத் திட்டங்கள் வடிவில் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் கிராமப்புறங்களில் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்குகிறது. இந்திய பொது சுகாதார தரநிலைகளின்படி நீண்ட காலத்திற்கு போதுமான எண்ணிக்கையிலான வழக்கமான பணியிடங்களை உருவாக்குவதன் மூலமும், முக்கியமான இடைவெளிகளை நிரப்ப குறுகிய காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கு பணியிடங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மனிதவளத் திறன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அமைச்சகம் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 'இலவச நோயறிதல் சேவை முன்முயற்சி' திட்டத்தை ஆதரிக்கிறது. இது அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் நோயியல் மற்றும் கதிரியக்க நோயறிதல் சேவைகளை சமூகத்திற்கு நெருக்கமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொது சுகாதார வசதிகளின் அனைத்து நிலைகளிலும் (துணை மையங்களில் 14 சோதனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் 63 சோதனைகள், சமூக சுகாதார மையங்களில் 97 சோதனைகள், துணை மாவட்ட மருத்துவமனைகளில் 111 சோதனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 134 சோதனைகள்) இலவசமாக நோயறிதல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தரமான மற்றும் சரியான நேரத்தில் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக  வகையான ஊக்கத்தொகைகள் மற்றும் மதிப்பூதியங்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292343&reg=3&lang=1   

---

TV/PKV/SE


(रिलीज़ आईडी: 2292802) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी