ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேதத்துடன் நவீன மருத்துவ ஒருங்கிணைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 3:33PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் ஆயுர்வேத அறிவை நவீன மருத்துவ முறையுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

சில முக்கிய முன்முயற்சிகள் பின்வருமாறு:

•     சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் ஆயுஷ் பிரிவை நிறுவுதல்

•     தரநிலை அடிப்படையில் சிகிச்சை வழிகாட்டுதல்களை உருவாக்குதல்

•     மத்திய அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் துறைகளை ஏற்படுத்துதல்

மத்திய அரசுஆயுஷ் வசதிகளை ஆரம்ப சுகாதார மையங்கள்சமூக சுகாதார மையங்கள்மாவட்ட மருத்துவமனைகளில் ஒரே இடத்தில் அமைக்கும் ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கிறது. இதன் மூலம்நோயாளிகள் ஒரே இடத்தில் பல்வேறு மருத்துவ முறைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292385&reg=3&lang=1

***

TV/PLM/RJ/SE 


(வெளியீட்டு அடையாள எண்: 2292753) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी