பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்து மேலாண்மையில் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகைக் கருவியாக ‘போஷன் டிராக்கர்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:06PM by PIB Chennai

சக்ஷம் அங்கன்வாடி எனப்படும் திறன் அங்கன்வாடி இயக்கம், 2-ம் கட்ட ஊட்டச்சத்துக் இயக்கம் ஆகியவற்றின் கீழ்அங்கன்வாடி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் கண்காணிப்பதற்கும்அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும்தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகக் கருவியாக போஷன் டிராக்கர்’ என்ற டிஜிட்டல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் போஷன் டிராக்கர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கமாநிலங்களுக்கு உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கைகுழந்தைகளின் எண்ணிக்கை தாய்மார்களின் எண்ணிக்கை ஆகியவை போஷன் டிராக்கர் தகவல் பலகையில் (https://www.poshantracker.in/statisticsகிடைக்கின்றன.

இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள்குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292320&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SE 


(रिलीज़ आईडी: 2292732) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी