மருந்துகள் துறை
அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலை நிர்ணயம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 2:29PM by PIB Chennai
மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய அதிகார அமைப்பு (என்பிபிஏ), ஜெனரிக் மருந்துகள் உட்பட மருந்துகளின் இருப்பைக் கண்காணிக்கிறது. ஏதேனும் தட்டுப்பாடு இருந்தால் அதைக் கண்டறிந்து, நுகர்வோருக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகளை எடுக்கிறது. மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள விலை கண்காணிப்பு மற்றும் வள அலகுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட மருந்து/மருந்துகளின் தட்டுப்பாடு குறித்த அறிக்கைகள் பெறப்படும்போதெல்லாம், அந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக என்பிபிஏ, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், கார்போபிளாட்டின் ஊசி, சிஸ்பிளாட்டின் ஊசி, டெட்டனஸ் எதிர்ப்பு இம்யூனோகுளோபுலின் 250 IU மற்றும் 500 IU ஆகிய நான்கு மருந்துகளின் கடுமையான தட்டுப்பாடு குறித்து பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அவற்றின் உச்சவரம்பு விலையில் ஒரே முறை 50% உயர்வுக்கு என்பிபிஏ அனுமதி அளித்தது.
31.03.2026 வரை, அதிக விலை வசூலித்த 2737 வழக்குகளில் என்பிபிஏ நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், மருந்து நிறுவனங்கள் அதிக விலை வசூலிப்பது குறித்த மாநில வாரியான பதிவை என்பிபிஏ பராமரிக்கவில்லை.
இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292338®=3&lang=1
***
TV/PKV/SH/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2292634)
வருகையாளர் எண்ணிக்கை : 43