பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திலீப் மஹது கவித்திற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2026 5:27PM by PIB Chennai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திலீப் மஹது கவித்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில், புதிய சாதனைப் படைத்துள்ள திலீப் மஹது கவித், சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவரது வேகம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை காரணமாக பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அபாரமான திறமையை வெளிப்படுத்திய திலீப் மஹது கவித்!

ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய சாதனையைப் படைத்து, இந்த விளையாட்டு சீசனில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்திய அவருக்கு வாழ்த்துகள். அவரது வேகம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்புணர்வு ஆகியவை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளன. அவரது எதிர்கால முயற்சிளுக்கு நல்வாழ்த்துகள் !  

*

TV/SV/RJ/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2292126) வருகையாளர் எண்ணிக்கை : 43