உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டம், உணவுப் பதப்படுத்தும் கட்டமைப்பை வலுப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது

प्रविष्टि तिथि: 30 JUL 2026 4:45PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், 2017-18-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் “பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY)” என்றழைக்கப்படும் பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

(i) பண்ணை முதல் சில்லறை விற்பனை வரை மதிப்புச் சங்கிலி முழுவதும் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்துதல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்;

(ii) மதிப்புக் கூட்டலை ஊக்குவித்து அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல்;

(iii) உணவு பதப்படுத்துதல், பாதுகாத்தல் திறன்களை உருவாக்குவதற்கும்/விரிவுபடுத்துவதற்கும் நிதியுதவி;

(iv) ஒருங்கிணைந்த குளிர்பதனச் சங்கிலி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்;

(v) உணவுப் பாதுகாப்பு, தர உறுதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்;

(vi) உணவு பதப்படுத்தும் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்தல்;

(vii) மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்;

(viii) பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்துதல்.

30.06.2026 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 1256 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் சுமார் 37.76 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். இது தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்  உட்பட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், அனுமதிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட, செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் விவரம்;

தமிழ்நாட்டில் 41 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு அவற்றில் 7 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதில் 34417 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் ₹616.92 கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 362 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு அவற்றில் 69 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் 243772 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் ₹5443.67 கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291791&reg=3&lang=1

***

TV/PLM/SE


(रिलीज़ आईडी: 2292113) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी