மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்த பன்முனைத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2026 3:13PM by PIB Chennai

செமிகான் இந்தியா திட்டத்தில், செமிகான் 2.0 என அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வலுவான செமி கண்டக்டர் திறமையாளர்களை உருவாக்குவதற்காக இந்தியா ஒரு பன்முனைச் செயல் திட்டத்தை செயல்படுத்துகிறது. சிப் வடிவமைப்பு, உற்பத்தி, ஒருங்கிணைப்பு, சோதனை, குறியிடுதல், பேக்கேஜிங் வரையிலான முழு செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலிக்கும் ஆதரவளிக்கக்கூடிய ஒரு பணியாளர் குழுவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

பொறியியல் நிறுவனங்கள், கல்லூரிகளில் செமி கண்டக்டர் கல்விப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைப்பது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதை முன்னெடுத்துச் செல்ல, அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

சிப் வடிவமைப்பில் தொழில்துறைக்கு ஏற்ற மனிதவளத்தை வழங்குவதற்காக, அரசாங்கம் 'சிப்ஸ் டு ஸ்டார்ட்அப்' (C2S) திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், அதிநவீன சிப் வடிவமைப்பு கருவிகளுக்கான அணுகல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சி2எஸ் திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் நிறுவனங்களின் மாநில வாரியான பட்டியல் https://c2s.gov.in/EDA_Tool_Support.jsp என்ற இணையதளத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் சி2எஸ் திட்டத்தின் கீழ் 61 கல்வி நிறுவனங்கள் ஆதரிக்கப்படுகின்றன.

இந்தத் தகவலை நேற்று (29.07.2026) மக்களவையில் மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291667&reg=3&lang=1

***

TV/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2292041) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी