புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலைக் கண்காணிப்பு, வானிலை முன்னறிவிப்புக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 2:20PM by PIB Chennai

பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக உருவாகும் வானிலை சார்ந்த அம்சங்களை கண்காணிப்பதற்கும், அது தொடர்பான முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்கும் ஏதுவாக, அதற்கான கட்டமைப்புகளை நவீனமயமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வானிலை சார்ந்த துல்லியமான முன்னறிவிப்புகளை வெளியிடும் வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதற்கென உயர் திறன் கொண்ட கணினிகள், கண்காணிப்புக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்னறிவிப்பு சாதனங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் இதில் அடங்கும். தற்போது நாடு முழுவதும் பருவநிலை மாற்றம், வானிலை நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்க மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கண்காணிப்பு வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதில், கண்காணிப்பு நிலையங்கள், தானியங்கி வானிலை நிலையங்கள், தானியங்கி மழைமானிகள், டாப்ளர் வானிலை ரேடார்கள், வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்பு நிலையங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291635&reg=3&lang=1  

***

TV/SV/RJ/SE


(रिलीज़ आईडी: 2292024) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी