பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பீகாரில் உள்ள பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 1:49PM by PIB Chennai
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, பீகார் மாநிலத்தில் பழங்குடியினருக்கான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார். மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு மாநில அரசிடம் இருப்பதால், மாவட்ட வாரியான நிதி முன்னேற்றம் அமைச்சகத்தில் பராமரிக்கப்படவில்லை என்றார் அவர்.
பீகாரில் மாவட்ட வாரியாக 30.06.2026 அன்று பயனடைந்தோரின் பட்டியலை அவர் வெளியிட்டார்.
பிரதமரின் கிராமிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 108 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேற்கு சம்பாரனில் பழங்குடியினர் திறன் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன மீன்வளத்துறை 50 உறுப்பினர்களுக்கு 138.25 லட்சம் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மாவட்ட வாரியான பயனாளிகளின் தரவு அந்தந்த செயல்படுத்தும் அமைச்சகங்கள்/துறைகளால் பராமரிக்கப்படுகிறது.
மேலும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் பீகார் மாநிலத்தில் 3 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளை அனுமதித்துள்ளது. இதில் 2 பள்ளிகள் செயல்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291624®=3&lang=1
***
TV/PKV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2291990)
வருகையாளர் எண்ணிக்கை : 45