பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் நிலை

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:44PM by PIB Chennai

மக்களவையில் இன்று (30.07.2026) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 728 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றில் 508 பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

2025-26-ம் ஆண்டில் 43 புதிய ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டது, நாட்டில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி வலையமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முயற்சியாகும்.

 நாடு முழுவதும் உள்ள இந்தப் பள்ளிகளில் கல்வி, விளையாட்டு வசதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், நவீன கற்பித்தல் கருவிகளுடன் கூடிய நன்கு வசதியளிக்கப்பட்ட வகுப்பறைகள், இணைப்புப் படிப்புகள், குறைத்தீர் வகுப்புகள், அறிவியல், கணினி ஆய்வகங்கள், பல்வேறு கற்றல் வளங்களைக் கொண்ட நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள், இசை, கலை மற்றும் விளையாட்டு போன்ற பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கான வசதிகள், டிஜிட்டல் கல்விக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், இணைய வசதியுடன் கூடிய கணினி ஆய்வகங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள் பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில், 9111 ஆசிரியர்/ ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள இந்தப் பள்ளிகளுக்காக, 7267 ஆசிரியர்/ ஆசிரியர் அல்லாத பணியாளர்களைக் கொண்ட மற்றொரு தொகுதிக்குத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291615&reg=3&lang=1

***

TV/PLM/SE


(रिलीज़ आईडी: 2291982) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी