பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிதமரின் ஜன்மன் திட்டத்தின் நிலவரம்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:46PM by PIB Chennai

இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே, 18 மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசத்தில் வாழும் 75 'குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு' சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 'பிரதமரின் ஜன்மன் திட்டம் 2023 நவம்பர் 15 அன்று  பிரதமரால் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

பாதுகாப்பான இருப்பிடம், தூய்மையான குடிநீர், கல்விக்கான வசதிகள், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்மயமாக்கல் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்குகள் 9 தொடர்புடைய அமைச்சகங்களால் அமல்படுத்தப்படும் 11 தலையீடுகள்/திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் வாழும் மக்கள்தொகையை உள்ளடக்க, அவர்களின் மக்கள்தொகை எண்கள் மற்றும் உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கணிப்பதற்காக, பழங்குடியினர் விவகார அமைச்சகம் மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் / துறைகள் மூலமாக பிரதமரின் கதிசக்தி மொபைல் செயலி மூலம் குடியிருப்பு அளவிலான தரவு சேகரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291620&reg=3&lang=1

***

TV/PKV/SH

 


(रिलीज़ आईडी: 2291838) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी