பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசத்தில் பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:34PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, தார்தி ஆபா பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 7 வட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மூர், பாங்கி ஆகிய இரண்டு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பர்மூர் ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 30 கிராமங்களும் பாங்கி ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 48 கிராமங்களும் இந்த தார்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த இரு திட்டங்களின் கீழ், முறையே ரூ.551.11 லட்சம், ரூ.881 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291605&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2291810) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी